search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில்"

    • அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 6.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மற்றும் அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக 6.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2024, நவம்பர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 27,50,030 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 599 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,208 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,62,463 பயணிகள் (Online QR 1,57,016; Paper QR 18,40,921; Static QR 2,24,276; Whatsapp - 5,40,257; Paytm 3,90,030; PhonePe – 2,99,396; ONDC – 1,10,567),சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,42,192 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    • இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
    • இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனை தொடர்ந்து சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கி இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்குகிறது.

    இந்த நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் வாகனங்கள் பழுதானால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் தெரிவித்துள்ளது. 

    முன்னதாக, கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பயணிகள் அதனை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் படிக்கட்டுக்களை பயன்படுத்த வேண்டும்.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன் அதி கனமழையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலும் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

    பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் படிக்கட்டுக்களை பயன்படுத்த வேண்டும். கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பயணிகள் அதனை பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் உதவி இருந்தால் – 1860 425 1515, மகளிர் உதவி எண் - 1553706 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பனகல் பார்க் பகுதியில் வரும் 24ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்.
    • சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக பனகல் பார்க் பகுதியில் வரும் 24ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள், பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. பனகல் பார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நுழைவு/ வெளியேறும் அமைப்புக்குண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, பினவரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 25.11.2024 முதல் 01.12.2024 வரை 07 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

    வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக. அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

    உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாட்டை பாதுகாக்கும் முக்கியமான பொறுப்பில் இன்னும் நிறைய பெண்கள் பங்கேற்க வேண்டும்.
    • மிக முக்கிய பிரமுகர்களுக்கு கமாண்டோக்களாக பாதுகாப்பு அளிக்கும்.

    புதுடெல்லி:

    மத்திய ஆயுத போலீஸ் படைகளில் ஒன்றான மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) கடந்த 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முக்கியமான அரசு மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களின் பாதுகாப்புக்கு இப்படை பொறுப்பேற்றுள்ளது.

    இதற்கிடையே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையில், அனைத்து பெண்கள் படைப்பிரிவு ஒன்றை உருவாக்க மத்திய அரசு கடந்த 11-ந்தேதி ஒப்புதல் அளித்தது. இத்தகைய பெண்கள் படை உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    படையினரின் பணிச்சுமை கருதி, இப்படை உருவாக்கப்படுகிறது. இதில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில், விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களின் பாதுகாப்பை பெண்கள் படைப்பிரிவு ஏற்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தேச கட்டமைப்பின் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும்.

    அதன்படி, சி.ஐ.எஸ்.எப்.பின் முதலாவது பெண்கள் படைப்பிரிவு உருவாக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    மேம்பட்ட படையாக உருவாக்கப்படும் பெண்கள் படை, தேசத்தின் முக்கியமான கட்டமைப்புகளான விமான நிலையங்கள், மெட்ரோ ரெயில்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும். மிக முக்கிய பிரமுகர்களுக்கு கமாண்டோக்களாக பாதுகாப்பு அளிக்கும். நாட்டை பாதுகாக்கும் முக்கியமான பொறுப்பில் இன்னும் நிறைய பெண்கள் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை இம்முடிவு நிச்சயம் நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை வரையில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மெட்ரோ சுரங்கப் பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன்படி கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை வரையில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.

    18 மீட்டர் ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் கச்சேரி சாலை வழியாக சாந்தோம் கிறிஸ்தவ ஆலயத்தை தாண்டி நடைபெற்ற போது மீத்தேன் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

    கார்பன் மோனாக்சைடு வாயு கசிவும் ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மெட்ரோ சுரங்கப் பணிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த வாயு கசிவு ஆபத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

    இதுபற்றி மெட்ரோ அதிகாரிகள் கூறும்போது, இந்த கியாஸ் கசிவு ஆபத்தானது அல்ல என்றும் அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, காற்றில்லா நிலைகளில்தான் எரியும் தன்மை கொண்ட மீத்தேன் உருவாகும். கரிமப் பொருட்கள் ஏற்கனவே இருந்த இடங்களிலேயே மீத்தேன் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

    இப்படி மீத்தேன் இருக்கும் இடத்தில் கார்பன் மோனாக்சைடு வாயு உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த வாயு கசிவு பிரச்சனையை சரிசெய்து மெட்ரோ ரெயில் பணிகளை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் சென்னை மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக சுரங்கப்பாதைகள், உயர்மட்ட பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு முதல் 2-ம் கட்ட மெட்ரோ ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.


    2-ம் கட்ட திட்டத்துக்கான டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் டெப்போவிடம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு ரெயில் அடுத்த மாதம் வர உள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி ஆலையில் நடந்து வருகிறது.

    டிரைவர் இல்லாத மேலும் 9 ரெயில்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வர உள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர்களுடன் கூடிய 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத 3 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் தேவையை பொருத்து அது 6 பெட்டிகளை கொண்டதாக மாற்றப்படும்.

    டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதுவரை 50 சதவீத சோதனைகள் முடிந்துள்ளன. ரெயிலை இயக்கும் போது எந்த பிரச்சினையும் எழவில்லை.

    நாங்கள் ரெயில்களின் அனைத்து பாகங்களையும் சரிபார்த்து வருகிறோம். ரெயிலின் வேகம், அது எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து இந்த மாத இறுதியில் சோதனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம்.
    • அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு.

    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
    • பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் செல்லும் வசதியாக நாளை மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மெட்ரோ ரெயிலில் Non-Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழப்படும்.
    • சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் Non-Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் தொடங்கிய 11 ஆண்டுகளில் முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ, சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
    • இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சி காலத்தில் 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் - ஒன்றிய அரசும் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை தொடங்கினோம்.

    22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

     

    இதன் தொடர்ச்சியாக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித் தடங்களில் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமருக்கும் - ஒன்றிய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த இரண்டாவது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரெயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை வரையிலும் (26.1 கி.மீ), மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் (44.6 கி.மீ) என சுமார் 116.1 கி.மீ தொலைவிற்கு 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரெயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 1,215.92 கோடிமதிப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியது.

    இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8-ந்தேதி ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரெயிலினை கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.

    இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

    அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டம் வரும் 26-ந் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ×